சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே ஊரைச்சேர்ந்த ஞானப்பிரசாத் (வயது 27) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தவிர பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் சாராய ஊறலையும் கண்டு பிடித்து அழித்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக தியாகராஜபுரத்தை சேர்ந்த மொட்டையம்மாளை (வயது 60) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.