தோட்ட உரிமையாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு
கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்தது தொடர்பாக தோட்டத்து உரிமையாளர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி
கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்தது தொடர்பாக தோட்டத்து உரிமையாளர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரிகள் சிறைபிடிப்பு
தமிழக-கேரள எல்லையில் பொள்ளாச்சி அருகே செமனாம்பதி உள்ளது. இங்கு உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி, குழி தோண்டி புதைப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொதுமக்கள் கண்காணித்து மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு வந்த 3 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
7 போ் மீது வழக்கு
விசாரணையில் கேரள அரசு பணிக்கு செல்வதாக லாரிகளில் நோட்டீசு ஒட்டி வந்ததும், கேரளாவை சேர்ந்த சாஜு ஆண்டனி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டுவதற்கு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தாசில்தார் வெங்கடாச்சலம் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் தோட்டத்து உரிமையாளர் சாஜு ஆண்டனி மற்றும் டக்கிரியா, சுரேஷ், வினோத், ஜானி, விக்னேஷ், ராதேஷ் ஆகிய 7 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.