முககவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தல்

முககவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-04-09 17:03 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி வேண்டு கோள்விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் தங்களை காத்துக்கொள்ள முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற செயல் பாடுகளை பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. கொேரானா தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனக்கூறினார். மேலும் பேரூராட்சி அலுவ லர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விழிப்புணர்வு செய்தனர்.

மேலும் செய்திகள்