சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சங்கராபுரம் மற்றும் தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் உள்ள பாலாம்பிகா சமேத பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவில், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர் கோவில், மஞ்சபுத்தூர் கைலாசநாதர் கோவில், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர் கோவில், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர் கோவில், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர் கோவில், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர் கோவில், பாக்கம் சோளிஸ்வரர் கோவில், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தியாகதுருகம்
தியாகதுருகம் நஞ்சுண்டதேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சிறுநாகலூர் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.