சிறுவனுக்கு சூடு போட்ட 2 பேர் மீது வழக்கு
சிறுவனுக்கு சூடு போட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். தாய், தந்தை பிரிந்து வாழ்வதால் தனது பாட்டிவீட்டில் வசித்து வந்த சிறுவன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த பெண்ணின் பெயரை தனது மார்பில் பச்சை குத்தி இருந்தாராம். இதனை கண்ட சிறுவனின் உறவினர்கள் 2 பேர் சிறுவனை தனி அறையில் அடைத்து வைத்து இரும்புகம்பியால் பச்சை குத்திய இடத்திலும் காலிலும் சூடுவைத்ததாக கூறப்படுகிறது. யாரும் இல்லாத சமயம் வீட்டில் இருந்து தப்பி வந்த சிறுவன் தனது நண்பர்கள் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.