பெண்ணை தாக்கிய வாலிபர்

பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2021-04-09 16:44 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடையை சேர்ந்தவர் அர்ச்சுனன் என்பவரின் மகன் முத்துமுருகன். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததால் அவரின் மனைவி கோபித்துக்கொண்டு தனியாக பிரிந்து சென்றுவிட்டாராம். இதற்கு தனது பெரியம்மா காயாம்பு மனைவி பத்மினி (வயது55) தான் காரணம் என்றும் அவர்தான் செய்வினை வைத்து தனது குடும்பத்தை பிரித்து விட்டதாக கூறி பத்மினியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்மினி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த முத்துமுருகன் உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பத்மினி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமுருகனை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்