சொந்த ஊர் திரும்பிய வெளிமாநில போலீசார்

தேர்தல் பணிக்காக வந்திருந்த வெளிமாநில போலீசார் சொந்த ஊர் திரும்பினர்.

Update: 2021-04-09 16:36 GMT
விருத்தாசலம், 
தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற துணை ராணுவ படையினர், வெளி மாநில போலீசார் தமிழகம் வந்திருந்தனர். அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய பிரதேசத்தை சேர்ந்த போலீசார் இரண்டு படைகளாக வந்திருந்தனர். அவர்கள் விருத்தாசலம் பெரியவடவாடி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்நிலையில் பாதுகாப்பு பணிகள் முடிவடைந்ததும் போலீசார் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். முன்னதாக அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்களை லாரிகளில் ஏற்றி விட்டனர். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. 

இதையடுத்து விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய பிரதேசம் செல்லும் ரெயிலுக்காக அவர்கள் 4 போலீஸ் வேன்களில் புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்