ஆம்பூரில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் தீவிரம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்பூர் நகராட்சி சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆம்பூர்
இந்த நிலையில் நேற்று ஆம்பூர் பஸ் நிலையத்தில் முககவசம் அணிவது கட்டாயம், அவசியம் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மேலும் ஆம்பூர் பஜார் பகுதியில் நகராட்சி ஆணையாளர் த.சவுந்தரராஜன், சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.