ஆரணி அருகே டிராக்டர் டிரைவரை தாக்கி பணம், செல் போன் பறிப்பு. தப்பி ஓடியபோது கீழேவிழுந்ததில் ஒருவர் சிக்கினார்.

ஆரணி அருகே டிராக்டர் டிரைவரை தாக்கி ரூ.3,000 மற்றும் செல்போனை பறித்துக்குகொண்டு தப்பி ஓடியபோது கீழேவிழுந்ததில் ஒருவர் சிக்கினார்.

Update: 2021-04-09 14:45 GMT
ஆரணி

 டிராக்டர் டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் மோகன் (வயது 23). டிராக்டர் டிரைவர். இவர் ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் அறுவடையான வயல்களில் வைக்கோல் உருட்டுவதற்காக டிராக்டர் எடுத்துவந்து வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு வேலை முடிந்ததும், பல்லாந்தாங்கல் கூட்ரோட்டில் உள்ள கோவில் அருகே டிராக்டரை நிறுத்தி விட்டு, தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 3 மர்ம நபர்கள் மோகனை பீர் பாட்டிலை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.3,000, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, அவரை தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

ஒருவர் சிக்கினார்

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார். அப்போது அந்தவழியாக சென்றவர்கள், மர்ம நபர்களை விரட்டி சென்றனர். இதனால் மர்ம நபர்கள் சிறிது தூரம் சென்று மோகனிடம் இருந்து பறித்துச்சென்ற மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு, அவர்கள் வந்த ஒரே மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை முதலில் பார்த்த ஒரு பெரியவர் அந்த மர்ம நபர்களை அடையாளம் காட்டி கூச்சலிட்டுள்ளார். உடனே அவர்கள் தப்பி ஓடினர். அப்போது அவர்கள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் படுகாயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

2 பேருக்கு வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணிதாலுகா போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புனலப்பாடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (23) என்பதும், தப்பி ஓடியவர்கள் ஆரணிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா, பல்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி என்பது தெரியவந்தது

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் மோகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்