கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

Update: 2021-04-09 14:31 GMT
கோவை

கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் தினசரி 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று

கோவையில் தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிக பட்சமாக ஒரே நாளில் 750 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அது போல் தற்போது கோவையில் அடுத்த சில வாரங்களில் ஒரு நாளைக்கு 1,000 பேர் வரை கொரோனா ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

 பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்களாக உள்ளனர்.

ஆய்வகங்களின் எண்ணிக்கை

எனவே கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும்.

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 35 வார்டுகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்க ளின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியில் ஒரு மண்டலத்தில் 500 பேர் வீதம் கொரோனா பரிசோதனை செய்யப்ப டுகிறது. 

பரிசோதனை

இதில், தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்புடையவர் களில் குறைந்தபட்சம் 20 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

கோவையில் தற்போது கொரோனா பரிசோதனை முடிவில் 6 முதல் 6.5 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. கோவை மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்