தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2021-04-09 18:12 IST
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர், முககவசம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கி பேசினார்.
அபராதம்
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசியதாவது:-
 கொரோனா வைரஸ் 2-வது கட்டமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பரவும் வேகம் அதிகமாக உள்ளது. இந்த வைரசை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு நாளை (அதாவது இன்று) முதல் திருமண மண்டபங்கள், பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. எனவே மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும்.  முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கலுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகபெருமாள், காமராஜ், வெங்கடேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்