காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் உண்டில் வசூல் ரூ.5½ லட்சம்

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள 4 உண்டியல்களில் வசூலான காணிக்கை அறநிலையத்துறை உதவிஆணையர் ஜெயா தலைமையில் எண்ணப்பட்டது.

Update: 2021-04-09 05:17 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள 4 உண்டியல்களில் வசூலான காணிக்கை அறநிலையத்துறை உதவிஆணையர் ஜெயா தலைமையில் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.5 லட்சத்து 57 ஆயிரத்து 540 மற்றும் 21 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளி போன்றவை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி எண்ணப்பட்டது.

காணிக்கை எண்ணும் பணியின் போது தாசில்தார் நிர்மலா, அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் பூவழகி, குமரன், மேலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

மேலும் செய்திகள்