முசிறியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. வாக்குறுதி

முசிறியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. வாக்குறுதி.

Update: 2021-04-04 03:45 GMT
முசிறி, 

முசிறி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அம்மா பேரவை மாநில இணை செயலாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சியினருடன் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட எனக்கு அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்ய வைத்தீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் முசிறி தொகுதியில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைத்து பணிகள் நடைபெற்றுள்ளன. முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர், நத்தம், பாப்பாப்பட்டி, பைத்தம்பாறை, தும்பலம் உள்ளிட்ட பல்வேறு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்டியார்பட்டி ஏரியிலிருந்து கரிகாலி, உத்தண்டம்பட்டி ஏரிகளுக்கு செல்லும் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளை பாதுகாத்திட காவிரி ஆற்றில் நிரந்தர கொரம்பு அமைத்து தண்ணீர் கிடைத்திட வழிவகை செய்யப்படும். முசிறி, தொட்டியம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தி உயரிய சிகிச்சை அளிக்கப்படும். கொல்லிமலை புளியஞ்சோலை உபரிநீர் மகாதேவி ஏரிக்கு கொண்டுவரவும், முசிறியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கவும், தொட்டியத்தில் புதிய தீயணைப்பு நிலையம், முசிறி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தவும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். 8 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, குடும்ப பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 பணம் வங்கிக்கணக்கில் வரவு வைத்திடவும், இலவச கேபிள், வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம் போன்ற பல்வேறு திட்டங்கள் உங்களுக்கு கிடைத்திடவும், தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிடும் எனக்கு அனைத்து சமுதாய மக்களும் ஆதரவு தந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று பேசினார். அப்போது மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் பாரதிராஜா, வீரக்குமார், சத்யராஜா, கார்த்திக் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்