தென்காசி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா
தென்காசியில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 749 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 483 பேர் வீடு திரும்பி உள்ளனர். 104 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 162 பேர் இறந்துள்ளனர்.