நெல்லை மாவட்டத்தில் டாக்டர் உள்பட 78 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் டாக்டர் உள்பட 78 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் டாக்டர் உள்பட 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த டாக்டர் மற்றும் கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவில் பணியாற்றிய கூடிய தொழிலாளிகள் உள்பட 78 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 725 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 295 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 216 பேர் இறந்துள்ளனர்.
கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா தொற்று பரவலையொட்டி கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவில் அங்குள்ள முக்கிய இடங்களில் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.