ஓடும் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சாத்தூரில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-02 20:10 GMT
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 29). இவர் தனது காரில் சாத்தூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது மேட்டுப்பட்டியை அடுத்து தனியார் கல்லூரி அருகே காரில் இருந்து திடீரென புகை கிளம்பியது. உடனே அவர் காரை நிறுத்தி தீயை அணைக்க முயன்றார். பின்னர் இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். குமரேசன் காரில் புகை வந்தவுடன் சுதாரித்து கொண்டு காரை நிறுத்தி இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்