கண்காட்சியில் 2 பவுன் நகை மாயம்
விருதுநகரில் கண்காட்சியில் 2 பவுன் நகை மாயமானது.
விருதுநகர்,
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் நகை மற்றும் ஜவுளி கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளராக உள்ள நெல்லைமாவட்டம் அம்பை தாலுகா வெள்ளாங்குளியைச் சேர்ந்த மகேஷ் (வயது 45) என்பவர் இந்நகர கிழக்கு போலீசில் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:- சம்பவத்தன்று நகை கண்காட்சி முடிந்தவுடன் நகைகளை சரிபார்த்தபோது 2 மோதிரங்களை காணவில்லை என்றும் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் வந்து சென்ற பின்பு தான் இந்த மோதிரங்களை காணவில்லை என்றும் அந்த நபரை பார்த்தால் அடையாளம் சொல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாயமான மோதிரங்கள் 2 பவுன் எடையுள்ளது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்நகர்கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.