பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற சுயேச்சை வேட்பாளர்

பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற சுயேச்சை வேட்பாளர் சிறை வைக்கப்பட்டார்.

Update: 2021-04-02 19:56 GMT
மதுரை, ஏப்
மதுரை கிழக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுபவர் காந்தி. இவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மதுரைக்கு வரும் தினத்தில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் கூடல்புதூர் போலீசார் காந்தியின் வீட்டுக்குச் சென்று அவரை வீட்டிலேயே நேற்று காலை சிறை வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்