வாக்குச்சாவடி தன்னார்வலர்களுக்கு கொரோனா உபகரணங்கள்
வாக்குச்சாவடி தன்னார்வலர்களுக்கு கொரோனா உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வாடிப்பட்டி,ஏப்
சட்டமன்ற தேர்தலுக்காக சோழவந்தான் தொகுதியில் 305 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 தன்னார்வலர்கள் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த தன்னார்வலர்கள் வாக்குப் பதிவு செய்ய வரும் வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலையை சரிபார்த்து, கிருமிநாசினி மற்றும் கையுறை வழங்குவார்கள். இதற்காக வாக்குச்சாவடி தன்னார்வலர்களுக்கு கிருமிநாசினி, கையுறை, உடல் வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவி, கொரோனா கவச உடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால், உதவி தேர்தல் அதிகாரி பழனிக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன், வட்டார மேற்பார்வையாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.