நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 31 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 146 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.