இளம்பெண்ணிடம் நகை பறிப்பு
புளியங்குடியில் இளம்பெண்ணிடம் மர்ம நபர் நகை பறித்துச் சென்றார்.;
புளியங்குடி:
புளியங்குடி கற்பக வீதி 3-வது தெருவை சேர்ந்த ராஜூ மனைவி சுதா (வயது 27). இவர் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர், சுதா அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து புளியங்குடி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.