சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் விழிப்புணர்வு பேரணி
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிவகாசியில், பட்டாசு உற்பத்தியாளர்கள் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
சிவகாசி,
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிவகாசியில், பட்டாசு உற்பத்தியாளர்கள் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலின்போது 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிவகாசியில் நேற்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரவேற்பு
இந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நகர முக்கிய வீதிகளில் சென்ற இந்த பேரணியை பொது மக்கள் வரவேற்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம், இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கம், சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம், சிவகாசி வர்த்தகர் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.