வாலிபருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது

தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-02 19:28 GMT
தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்தவர் மூக்காண்டி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 26). இவரும், சக்திநகர் 2-வது தெருவை சேர்ந்த பால்ராஜ் (26) என்பவரும் நண்பர்கள் ஆவர். இதனால் மாரிமுத்தை பார்ப்பதற்காக, பால்ராஜ் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்தாராம். இதனை பிடிக்காத மாரிமுத்து, பால்ராஜை சத்தம் போட்டு உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாரிமுத்து, கால்டுவெல்காலனி அருகே வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த பால்ராஜ், மற்றொரு நண்பர் பன்னீர்செல்வம் (36) ஆகியோர் சேர்ந்து மாரிமுத்துவிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்கு பதிவு செய்து பால்ராஜ், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்