கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தாராபுரம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.அவர் எழுதிய கடிதம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2021-04-03 00:08 IST
தாராபுரம்
தாராபுரம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.அவர் எழுதிய கடிதம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவி
தாராபுரம் அடுத்துள்ள காளிபாளையத்தை சோ்ந்தவா் சந்திரசேகரன் (வயது48) கட்டிடமேஸ்திாி. இவரது மனைவி விஜயலட்சுமி (45) தனியாா் பனியன் நிறுவனத்தில்  தொழிலாளி.இவா்களது மகள் விசாகா ஞானலட்சுமி (18) தனியாா் கல்லூாியில் படித்து வந்தார். இந்த நிலையில் சந்திரசேகரனுக்கும், விஜயலட்சுமிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதனால் கடந்த 22-ந்தேதி அவா்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சந்திரசேகரன் தனதுமகளின் கழுத்தில் கத்தியை வைத்து தனது மனைவியின் கழுத்தில் உள்ள தாலியை கழற்றிதரும்படி கேட்டுள்ளாா். அதைத்தொடா்ந்து விஜயலட்சுமி தனது கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி கொடுத்துள்ளாா்.
எரிந்த நிலையில் கிடந்தார்
 பின்னா் சந்திரசேகரன் அப்பகுதியில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளாா். இந்த நிலையில் விஜயலட்சுமி வேலைக்கு சென்று விட்டதால் நேற்று விசாகாஞானலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது திடீரென விசாகாஞானலட்சுமி காப்பாற்றுங்கள்... காப்பற்றுங்கள்... என அலறியுள்ளாா். 
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் அவரது வீட்டிற்கு ஓடி சென்றுள்ளனா். அப்போது விசாகா ஞானலட்சுமி தீக்குளித்து எரிந்த நிலையில் கிடந்துள்ளாா். இது குறித்து அவா்கள் தாராபுரம் போலீசாருக்கு தகவல் தொிவித்துள்ளனா். உடன் விரைந்து வந்த போலீசாா் விசாகா ஞானலட்சுமியை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்ற அவா் பாிதாபமாக உயிாிழந்தாா்.
கடிதம் சிக்கியது
மேலும் அங்கிருந்து ஒரு கடிதத்தை கண்டெடுத்தனா். அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்தது. 
இதுகுறித்து விஜயலட்சுமி தாராபுரம் போலீசில் புகாா் செய்தாா். புகாரை பெற்றுக் கொண்ட தாராபுரம் போலீசாா் இது குறித்துவழக்குப்பதிவு செய்து விசாகா ஞானலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்