ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சில மாதங்களாக இருந்து வந்த நிலையில் நேற்று 13 பேர் பாதிக்கப்பட்டு இரட்டை இலக்க எண்ணிக்கையாக பாதிப்பு மாறியது.
இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 575 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 387 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 50 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.