கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

ராணிப்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2021-04-02 18:18 GMT
சிப்காட் 
ராணிப்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே உள்ள அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 45). இவர் ராணிப்பேட்டை பழைய திருத்தணி சாலையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் பழனி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்