தேர்தல் நாளன்று பயன்படுத்த 900 சக்கர நாற்காலிகள் தயார்
மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக தேர்தல் நாளன்று பயன்படுத்த 900 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை,
மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக தேர்தல் நாளன்று பயன்படுத்த 900 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
900 சக்கர நாற்காலிகள்
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி அன்று நடைபெறுகிறது. அன்றையதினம் வாக்குப்பதிவு மையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிரமமின்றி வாக்களிக்க செல்லும் ஏதுவாக சக்கரநாற்காலிகள் அமைத்துக்கொடுக்க இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதையொட்டி வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் வகையில் 900 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் சக்கர நாற்காலிகளை இயக்குவதற்காக ஒவ்வொரு மையத்திலும் தன்னார்வலர்கள் அமைப்பின் மூலம் தலா 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாய்வு தள வசதிகள்
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்குதடையின்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்வுதள வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வரிசை, பார்வையற்ற வாக்காளர்கள் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரப்பட்டியலை எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் பிரெய்லி முறையில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.