நகர தி.மு.க. செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
பேரணாம்பட்டு நகர தி.மு.க. செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டு

பணப்பட்டு வாடாவை தடுக்க..
வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி பட்டாபிராமன் தலைமையில 6 ேபர் கொண்ட குழுவினர் பேரணாம்பட்டு டவுன் சார்மினார் வீதியில் உள்ள பேரணாம்பட்டு நகர தி.மு.க. செயலாளர் ஆலியார்ஜுபேர் அஹம்மது என்பவரின் வீட்டுக்கு சோதனை நடத்த வந்தனர்.
பரபரப்பு
தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் வைத்துள்ளீர்களா? எனக் கேட்டு அவரின் வீட்டில் உள்ள 6 அறைகளில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அதில் ரூ.62 ஆயிரம் மட்டும் கிடைத்தது. அந்தப் பணம் குடும்ப செலவுக்காக வைத்திருந்தது தெரிந்தது. சோதனையில் அதனை தவிர முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்பபடுகிறது.
மேலும் அதே பகுதியில் வசித்து வரும் தோல் பதனிடும் தொழிலதிபர் முபாரக் அலி என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளால் பேரணாம்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

----
Reporter : S. MEENAKSHI Location : Vellore - VELLORE SUB-URBAN - PERNAMPET