தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் வாக்கு சேகரிப்பு
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் நேற்று 107- வது வார்டில் உள்ள வேம்புலி அம்மன் குடியிருப்பு, வெங்கடாசலபதி 1- முதல் 3-தெருக்கள், கந்தன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, அப்பாராவ் தோட்டம் 1-வது முதல் 3- தெருக்கள், அவ்வைபுரம், ஜோதி அம்மாள் நகர் முத்தியப்பன் தெரு, அருணாச்சலம் 1-முதல் 3-வது தெரு, முருகேசன் தெரு, வைத்தியநாதன் சாலை, ஹோட்டல் சுப்பராய தேர்தல் பணிமனை முடிவு, உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள், வியாபாரியிடம் துண்டு, பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.
மேலும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாஷிங் மெஷின் மாதம்தோறும் ரூபாய்1500 வருடத்திற்கு இலவசமாக 6- சிலிண்டர்கள் உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நமது வேட்பாளர் பெற்றுக் கொடுப்பார். இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சினை அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி கொடுப்பார்.
நீங்கள் எந்த நேரமும் நம்முடைய வேட்பாளரை சந்தித்து தங்களுடைய குறைகளை கூறி அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி கொடுப்பார். இந்த தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவதே அவருடைய லட்சியம் இதுவே நமது வேட்பாளர் முதல் பணியாக இருக்கும் என்றார்.