கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பலி

கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.;

Update:2021-04-02 20:19 IST
அலங்காநல்லூர்,ஏப்
மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் நவீன் (வயது 26). பொறியியல் கல்லூரி மாணவரான இவர் அலங்காநல்லூர் அருகே தண்டலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கிணற்றில் தனது நண்பர்களுடன் சென்று குளித்தார்.
அப்போது திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டார். பின்னர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் தீயணைப்பு படையினர் சென்று நவீனின் உடலை மீட்டனர். இது பற்றிய புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்