ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்;

Update: 2021-04-02 07:15 GMT
அருப்புக்கோட்டை,
ஏப்.
அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், வேல், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை கோவில் வளாகம் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். விழா பாதுகாப்பு குழுவினர்கள் பூக்குழியின் இருபுறமும் நின்று கொண்டு பூக்குழியில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை உடனடியாக மீட்க. அரணாக இருந்து செயல்பட்டனர். விழா ஏற்பாடுகளை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில், எஸ்.பி.கே. பள்ளி செயலாளர் காசி முருகன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்