7 தொகுதிகளில் தபால் வாக்குச்சீட்டு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் தபால் வாக்குச்சீட்டு சேகரிக்கப்பட்டது.

Update: 2021-04-02 06:47 GMT
விருதுநகர்,ஏப்
விருதுநகர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க இயலாதவர்கள் கொரோனா தொற்று மற்றும் அறிகுறிகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரிடம் படிவம் 12டி வழங்கப்பட்டு வாக்களித்த சீட்டு பெறப்பட்டு வருகிறது. தபால் வாக்குகளை சேகரிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பப்படும் குழுவினரிடம் அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தங்களது வாக்குகளை செலுத்தலாம். மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள், காவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களிடம் படிவம் 12ஐ பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது. மேற்படி அலுவலர்கள் செலுத்தும் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ந்தேதி காலை 7.59 மணி அளவில் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்