வீரமாச்சியம்மன் கோவில் திருவிழா

நெகமத்தில் உள்ள வீரமாச்சியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;

Update: 2021-04-02 06:08 GMT
நெகமம்

நெகமம் தளி ரோட்டில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. பின்னர் பல்வேறு இடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

தொடர்ந்து திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு எடுத்தல், பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்தி கடனை செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 

பிறகு சக்தி கும்பம் கங்கையில் விடுதல், சுவாமி திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை  மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம் நடக்கிறது.  

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர். 

மேலும் செய்திகள்