ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி
ஊருணியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தார்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை வலம்புரிநகர் பகுதியை சேர்ந்தவர் வையமுத்து. இவரது மகன் நவீன் (வயது 12). தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் கே.கே. நகர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஊருணியில் நேற்று காலை குளிக்கச் சென்றான். அப்போது அவன் ஊருணியில் ஆழமான பகுதியில் குளித்ததாக தெரிகிறது. இதனால் அவன் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.