வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து நாசம்
வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து நாசம்
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 54), விவசாயி. இவருடைய விவசாய நிலத்தில் இருந்த வைக்கோல் போர் நேற்று இரவு 8.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.