சிவகிரி அருகே பொன்காளியம்மன் கோவில் விழா தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு

சிவகிரி பொன்காளியம்மன் கோவில் விழாவையொட்டி தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

Update: 2021-04-01 21:11 GMT
சிவகிரி பொன்காளியம்மன் கோவில் விழாவையொட்டி தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். 
பொன்காளியம்மன் கோவில்
சிவகிரி அருகே அம்மன்கோவிலில் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
பொங்கல் விழா
நேற்று முன்தினம் முக்கிய விழாவான பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலை முதலே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையொட்டி அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடந்தது. 
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளி விட்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் குதிரை துளுக்கு பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. 
கைகளில் தீப்பந்தம் ஏந்தி...
அப்போது கோவிலை சுற்றி உள்ள வளாக பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் தங்களுடைய கைகளில் தீப்பந்தம் ஏந்தி அம்மனை தரிசனம் செய்தனர். 
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘அம்மன் வீதி உலா வரும்போது கைகளில் தீப்பந்தம் ஏந்தி வழிபட்டால் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்,’ என்பது நம்பிக்கையாக உள்ளது என்றனர்

மேலும் செய்திகள்