அவினாசி அருகே கருவலூரில் கோழி இறைச்சி கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி அருகே கருவலூரில் கோழி இறைச்சி கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
அவினாசி,
அவினாசி அருகே கருவலூரில் கோழி இறைச்சி கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி கூறப்படுவதாவது:-
காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சி பகுதியில் கோழி இறைச்சி கடைகள் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 பிப்ரவரியில் இறைச்சிக்கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில் கருவலூர் அம்மன் நகர் பகுதியைச்சேர்ந்த சில குடும்பத்தினர் கருவலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் அம்மன் நகர் பகுதியில் இறைச்சிக்கடை அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே அங்கு இறைச்சி கடை அமைக்கக்கூடாது என்று அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இங்கு இன்னும் இறைச்சி கடை அகற்றப்படவில்லை என்று நேற்று அந்த பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுபற்றி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முறையாக பேச்சுவர்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து கருவலூர் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில் கடந்த 8 வருடமாக முறைப்படி ஏலம் விடப்பட்டு சுகாதாரமான முறையில் இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.