மேலும் 60 பேருக்கு பாதிப்பு: நெல்லையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

நெல்லையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

Update: 2021-04-01 20:18 GMT
நெல்லை:
நெல்லையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

கொரோனா தொற்று

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அரசு ஊழியர், வங்கி ஊழியர், வி.எம். சத்திரம் இ.பி.காலனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 60 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதியவர் பலி

இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். ேமலும் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று கிருமி நாசினி தெளித்தனர். 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 16 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 155 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 216பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்