மது விற்ற பெண் உள்பட 5 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இடையார் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் கரடிகுளம் கிராமத்தை சேர்ந்த அர்ச்சுணன்(வயது 44), ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன்(49), இடையாரை சேர்ந்த ரவிச்சந்திரன்(33), பார்வதி(60), உடையார்பாளையத்தை சேர்ந்த முருகன்(45) ஆகியோர் மது பாட்டில்களை அப்பகுதிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.