கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பலி மேலும் 40 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கொரோனா
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 706 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் திண்டுக்கல்லில் இருந்து பண்ருட்டி வந்த 3 பேருக்கும், சென்னையில் இருந்து என்.எல்.சி. பகுதிக்கு வந்த ஒருவருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 13 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது.
பரிசோதனை
மேலும் நேற்று முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 68 வயது முதியவர். இவர் கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று அந்த முதியவர் உயிரிழந்தார். மேலும் நேற்று மட்டும் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுதவிர 271 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.