நெல்லையில் ரூ.23½ லட்சம் நகை பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

நெல்லையில் ரூ.23½ லட்சம் மதிப்புள்ள நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-01 20:14 GMT
நெல்லை:
நெல்லையில் ரூ.23½ லட்சம் மதிப்புள்ள நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை தொகுதி பறக்கும் படையினர்  நெல்லை கே.டி.சி. நகரில் தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

70 பவுன்  நகை பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 70 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.23½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் காரில் வந்தவர்களிடம் நகைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. 

இதையடுத்து பறக்கும் படையினர் அந்த நகைகளை பறிமுதல் செய்து, பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் நெல்லை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள், நகை கொண்டு வந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். 

நெல்லையில் 70 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்