வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது47). அதே பகுதியைச் சேர்ந்த லதா (45). இருவரும் நாய் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் 2 பேரும் நாய்கள் சண்டை போட்டதில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வீடு புகுந்து லதாவை தாக்கினார். காயமடைந்த லதா சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு முருகனை செய்து கைது செய்தனர்.