தோட்டத்தில் கஞ்சா பதுக்கியவர் கைது
தோட்டத்தில் கஞ்சா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காடுபட்டி கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 1½கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கதிரேசன் (வயது47) என்பவரை விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.