மேற்பனைக்காட்டில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
மேற்பனைக்காட்டில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.
கீரமங்கலம், ஏப்.2-
கீரமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் சதீஷ் (வயது 22). நேற்று இவர் மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் அவர் அங்குள்ள ஒரு குளத்தில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். இதனையடுத்து அவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அங்கு வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்த விவசாயிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த போது சதீஷ் இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.