தென்காசியில் காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
தென்காசியில் காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தென்காசி ஆசாத் நகர் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த காரில், பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் முருகன் உரிய ஆவணமின்றி ரூ.98 ஆயிரத்து 500 எடுத்து சென்றது தெரிய வந்தது.
எனவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தென்காசி தாலுகா அலுவலகம் மூலமாக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.