தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது 17 பவுன் மீட்பு

விராலிமலையில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.;

Update: 2021-04-01 19:21 GMT
விராலிமலை, ஏப்.2-
விராலிமலையில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
சங்கிலி பறிப்பு
விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் கென்னடி. இவரது மனைவி கலைமதி (வயது 40). இவர் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி விராலிமலை கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தங்க சங்கிலி  பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சி.கண்காணிப்புகேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மேக்குடியை சேர்ந்த  வேலுச்சாமி (40), கரூர் மாவட்டம் வடிவேல் நகரைச் சேர்ந்த  நந்த குமார் என தெரியவந்தது. இவர்கள் திருட்டு வழக்கில் கடந்த 15-ந்தேதி கீரனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது தெரியவந்தது.
நகைகள் மீட்பு
இந்தநிலையில் கீரனூர் நீதிமன்றம் அருகே வைத்து வேலுச்சாமியை விராலிமலை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர் கொடு்த்த தகவலின் பேரில் நந்தகுமாரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இதில் வேலுச்சாமியிடம் இருந்து 5 பவுன் திருட்டு நகையும், நந்தகுமாரிடம் இருந்து 12 பவுன் திருட்டு நகையும் மீட்கப்பட்டது. பின்னர் இருவரும் திருமயம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்