கொரோனா தொற்று பரிசோதனை முகாம்

கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2021-04-01 19:20 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் குந்தாணி பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர்கள் மயில்வாகனன், கார்த்தி, வீரமணி, உதவியாளர் ஜெகதீஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர்.  பின்னர் 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் குந்தாணி பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்