விபத்தில் எலெக்ட்ரீசியன் பலி

விபத்தில் எலெக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2021-04-01 19:16 GMT
வாடிப்பட்டி, 
அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் ரகுபதி (வயது 28) எலெக்ட்ரீசியன். இவர் நகரியில் உள்ள பிஸ்கெட் கம்பெனியில் எலெக்ட்ரீசி யனாக வேலை செய்து வந்தார். நேற்று  வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கச்சைகட்டி பசும்பொன் நகரை சேர்ந்த ராஜா மகன் கண்ணன் (35) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே ரகுபதி பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்துவாடிப்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் ஸ்ல்வியா ஜாஸ்மின் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்