ஆலங்குடியில் துணை ராணுவப்படையின் கொடி அணிவகுப்பு

துணை ராணுவப்படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.;

Update: 2021-04-01 18:49 GMT
ஆலங்குடி,ஏப்.2-
ஆலங்குடியில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பை ஆலங்குடி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்மலர் தொடங்கி வைத்தார். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா,  இன்ஸ்பெக்டர் அலாவுதீன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடி அணிவகுப்பு ஆலங்குடி செட்டிகுளம் தென்கரையிலிருந்து புறப்பட்டு கலைஞர் சாலை, திருவள்ளுவர் சாலை, அரசமரம் பஸ்நிறுத்தம்  வழியாக பஸ் நிலையம் வந்து முடிவடைந்தது.

மேலும் செய்திகள்