ராணிப்பேட்டையில் ரூ.18 லட்சம் மதிப்பிலான சேலைகள் பறிமுதல்

ராணிப்பேட்டையில் ரூ.18 லட்சம் மதிப்பிலான சேலைகள் பறிமுதல்

Update: 2021-04-01 18:25 GMT
ராணிப்பேட்டை

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதத்தில் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து கார் ஒன்று காஞ்சீபுரத்துக்கு சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டை முத்துக்கடை அருகே வரும்போது அங்கிருந்த பறக்கும் படை நிலை கண்காணிப்பு அதிகாரி ரவிகுமார் தலைமையிலான குழுவினர் காரை நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.18 லட்சத்து 13 ஆயிரத்து 360 மதிப்பிலான 1097 சேலைகள் இருப்பதும் அவை காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு கொண்டு செல்வதும் தெரிந்தது. ஆனால் அதற்கு   போதுமான ஆவணங்கள் இல்லாததால் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலாஜா தாசில்தார் ஜெயப்பிரகாசிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் ராணிப்பேட்டை சிப்காட் அருகே பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை பறக்கும் படை அதிகாரி ரகு தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தபோது காரில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வாலாஜா தாசில்தார் ஜெயப்பிரகாசிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்